மணல்மேட்டில் இருந்து இத்தலத்து இறைவன் சுயமாகத் தோன்றியதால் மூலவர் 'தான்தோன்றியப்பர்' என்ற திருநாமம் பெற்றார். ஊர் பெயர் ஆக்கூர். கோயிலின் பெயர் தான்தோன்றி.
மூலவர் 'தான்தோன்றீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'வாள்நெடுங்கண்ணியம்மை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
இத்தலத்தில் மன்னன் ஒருவன் இறைவன் கட்டளைப்படி, ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு அளித்தபோது ஒருவர் குறைய, இறைவனே வந்து உணவு உண்டார். அதை நினைவூட்டும் வகையில் 'ஆயிரத்தில் ஒருவர்' என்னும் உற்சவ மூர்த்தி இங்கு உள்ளார்.
அகத்தியருக்கு இறைவன் திருமணக் காட்சியைக் காட்டியருளிய தலம்.
கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்று.
அகத்தியர், புலஸ்திய முனிவர், அத்ரி மகரிஷி, குபேரன் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான சிறப்புலி நாயனார் இத்தலத்தில் பிறந்து யாகம் செய்து சிவபெருமானை வழிபட்டு முக்தி பெற்ற தலம்.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். இக்கோயில் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|